Siththarkal-- சித்தர்கள்
Loses we have changes the
way
We look at the world and
The way the world looks at
us.
Sivam . Nama Sivaya . Sivaya Namaha
கோரக்கர்
"சொல்லவே கோரக்கர் பிறந்த
நேர்மை
சுந்தரனார் வசிஷ்ட மகா
வழியாருக்கு
புல்லவே காணக் குற
ஜாதியப்பா
புகழாகான கன்னியவள் பெற்ற
பிள்ளை
வெல்லவே அனுலோமன் என்னலாகும்
வேதாந்த கோரக்கர் சித்து
தாமும்
நல்லதொரு பிரகாசமான சித்து
"
- போகர் 7000 -
கோரக்கர் வசிட்டரின் மகன்
என்று போகர்
தனது போகர்
ஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார்.
சட்டை முனி, கொங்கணவர்
போன்றோரின் நெருங்கிய நண்பாராக இருந்ததாய் தனது
நூலான கல்ப
போதம் என்னும்
நூலில் குறிப்பிடுகிறார்.
புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு
என்ற ஊரில்
இவர் தவம்
செய்ததாகவும் அதனால் அந்த ஊருக்கு கோர்க்காடு
என்ற பெயர்
வந்ததாகவும் சொல்லப் படுகிறது.
இவர் எழுதிய பாடல்கள்
அனைத்தும் படிப்பவர்களுக்கு
எளிமையாகாவும் பொருள் புரிந்து கொள்ள இலகுவாகாவும்
உள்ளது குறிப்பிட
தக்கது.
கோரக்கர் கல்ப போதம்
கோரக்கர் காள மேகம்
கோரக்கர் கபாடப் பூட்டு
கோரக்கர் ஞான சோதி
கோரக்கர் முனி ஜென்ம
சித்து
கோரக்கர் பஞ்ச வர்த்தம்
கோரக்கர் சந்திர ரேகை
கோரக்கர் நமனாசத் திறவுகோல்
கோரக்கர் பிரம்மமா ஞானம்
கோரக்கர் கற்ப சூத்திரம்
கோரக்கர் தாண்டகம்
கோரக்கர் மூலிகை
கோரக்கர் வசார சூத்திரம்
கோரக்கர் சூத்திரம்
கோரக்கர் அட்ட கர்மம்
கோரக்கர் முத்திநெறி
கோரக்கர் கற்பம்
கோரக்கர் மலை வாகடம்
கோரக்கர் முத்தாராம்
கோரக்கர் ரவு மேகலை
கோரக்கர் முனி ஆன்ம
சித்து
ஆகிய நூல்களை இவர்
எழுதியதாக சொல்லப்
படுகிறது.
இவர் பேரூரில் சித்தியடைந்ததாக
சொல்லப் படுகிறது.
No comments:
Post a Comment